Slumdog Millionaire - திரைப்படம்
மதியம் 28 டிசம்பர் 2008 சுபநேரத்திற்கு இரவு 13:17 அரங்கேற்றியது மாயாSlumdog millionaire -Movie
நன்றி:Google Video
சுனாமிப்பேரலை வடுக்களில் இருந்து மீண்டெழுவோம்
மதியம் 26 டிசம்பர் 2008 சுபநேரத்திற்கு இரவு 09:21 அரங்கேற்றியது மாயாசினிமா சினிமா சினிமா அனுபவப்பகிர்வு
மதியம் 17 அக்டோபர் 2008 சுபநேரத்திற்கு மாலை 04:25 அரங்கேற்றியது மாயாவணக்கம் வணக்கம் வணக்கம் பதிவெளுதி கன காலமாச்சு . . . இலங்கையிலிருந்து வெளிக்கிட்டதிலயிருந்து இன்று வரை முழுமையானதொரு பதிவினை எழுதவில்லை(அங்கையிருக்கேக்க ஏதோ எழுதிக்கிழிச்சதோ என்டு கேட்கிறது கேட்குது !!!) ஆனாலும் பின்னூட்டங்களையும் அங்கைஇங்கையென்டு போட்டுத்தாக்கிக்கொண்டு வந்ததோட சில பதிவுகளையும் போட்டிருக்கிறன் .
இறுதியாக இன்னொன்று
தாயகத்தில் பல கலைஞர்கள் இன்னும் இலைமறை காயாக மறைந்துள்ளார்கள் இவர்களை நல்லவகையில் வெளிக்கொணர்வது நமது கடமையல்லவா
எனக்குப்பிடித்த சில நம் அருகாமை நண்பர்கள்/கலைஞர்களின் படைப்புக்கள்
ஒலிம்பிக் - நேரடி ஒளிபரப்பு
மதியம் 14 ஆகஸ்ட் 2008 சுபநேரத்திற்கு இரவு 13:37 அரங்கேற்றியது மாயா08-08-08க்குத்தொடங்கியது ஒலிம்பிக் ஆகஸ்ட் 24ம் தேதி வரை போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். 205 நாடுகளிலிருந்து 10 ஆயிரத்து 500 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒலிம்பிக்கில் மொத்தம் 302 போட்டிகள் நடைபெறுகின்றன.
அவற்றை நேரடியாகக்கண்டுகளிக்க இங்கு செல்லுங்கள்
http://news.bbc.co.uk/sport1/hi/olympics/live_action/default.stm
ஆரம்பநாள் நிகழ்வை கண்டுகளிக்க இங்கு செல்லுங்கள்
http://www.bbc.co.uk/programmes/b00cpf8p
கலாச்சாரம்,பாரம்பரியம் அனைத்தையும் வெளிப்படுத்திய ஒலிம்பிக் போட்டி 2008 (கண்ணொளிக்காட்சிகள்)
மதியம் 8 ஆகஸ்ட் 2008 சுபநேரத்திற்கு இரவு 09:59 அரங்கேற்றியது மாயா
08 வருடம்
08ஆம் மாதம்
08ஆம் நாள்
08 மணி
08 நிமிடம்
08 விநாடிக்கு துவங்கியது ஒலிம்பிக் ஆகஸ்ட் 24ம் தேதி வரை போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். 205 நாடுகளிலிருந்து 10 ஆயிரத்து 500 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒலிம்பிக்கில் மொத்தம் 302 போட்டிகள் நடைபெறுகின்றன. சீனாவிலிருந்து அதிகபட்சமாக 639 வீரர்கள் பங்கேற்கிறார்கள். அமெரிக்காவிலிருந்து 596 வீரர்கள் பங்கேற்கின்றனர். அமெரிக்காவில் இதற்குமுன்பு இவ்வளவு பேர் எந்த ஒலிம்பிக்கிலும் பங்கேற்றது இல்லை. இந்தியாவிலிருந்து 55, பாகிஸ்தானிலிருந்து 21, இலங்கையிலிருந்து 8 வீரர்களும் பங்கேற்கின்றனர்
தொடக்கவிழா தொடர்பான கண்ணொளிகள் சில
இது நான் பார்த்த ஒலிம்பிக் 2008
குசேலன் - கண்ணொளிக்காட்சிகளுடன் விமர்சனம்
மதியம் 1 ஆகஸ்ட் 2008 சுபநேரத்திற்கு இரவு 16:09 அரங்கேற்றியது மாயா* நட்பின் பெருமையை கூறும் வகையில் வந்திருக்கும் இன்னொரு படம் குசேலன்.
* படத்தில் பசுபதி நடிப்பில் வெளுத்து கட்டியிருக்கிறார்
* பாடலொன்றில் இயக்குனர் முதல் தேனீர் கொடுப்பவா்கள் வரை காட்டியிருப்பது அழகு (Om Shanthi Om இலும் இறுதியில் காட்டுவார்கள் அது வேற கதை)
* சூப்பர் ஸ்டார் என்ற அற்புதமான என்ற அற்புதமான மனிதர் வீணடிக்கப்பட்டிருக்கிறார்
* வடிவேலுவின் காமெடி பயங்கரமோசம் .. நயன்தாராவின் அந்தரங்க அறைக்குள் வடிவேலு மறைந்திருந்து பார்ப்பதும், நயன்தாரா கண்ணாடி முன்பாக . . . . . . . . . . . . வாசு படம் மாதியே தெரியவில்லை
* சந்தானத்தின் மற்றும் லிவிங்ஸ்டன் மற்றும் சகபாடிகளின் ஓரிரு காமெடிகள் பரவாயில்லை. (சந்தான பாரதி ரெம்பப்பாவம்)
* கடைசியில் மைக் முன்பாக ரஜினி பேசும் ஐந்து நிமிட வசனமும், ரஜினியை புகழ்ந்து ஆசிரியர்கள் ஒவ்வொருவராக நீண்ட வசனம் பேசுவதும் விஜயகாந்த் படங்களை நினைவூட்டுகிறது
* அருமையான இசையை காட்சிகளால் வீணடித்துள்ளார்கள் உதாரணமாக சூப்பர் ஸ்டாரின் அறிமுகப் பாடல் அதில் Graphics என்று அசிங்கப்படுத்தியுள்ளனர்
* மொத்தத்தில் நடிகளா பிரபு நிலமை ரெம்ப மோசம்ம்ம்ம்ம் :((
குசேலன் சும்மா எதிர்பார்ப்புக்கள் எதுவுமின்றி போனால் பார்க்கலாம்
இலங்கை மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களின் திரைப்படப்பாடல் வெளியீடு
மதியம் 31 ஜூலை 2008 சுபநேரத்திற்கு மதியம் 00:46 அரங்கேற்றியது மாயாஇலங்கை மொரட்டுவை பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் சிலரது சொந்த முயற்சியால் திரைப்படம் முயற்சியை இவ்வருட ஆரம்பத்தில் தெரடக்கியிருந்தனர் . அந்த வகையில் அதற்கான ஆரம்பக்கட்ட வெளிப்புறப்படப்பிடிப்புக்கள் யாவும் முடிவடைந்த நிலையில் பாடல்களை அண்மையில் வெளிடயிட்டிருந்தனர் ஆனால் துரதிஸ்டவசமாக அண்மையில் மொரட்டுவைப்பகுதியில் ஏற்ட்ட நிகழ்வுகளால் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன (இந்தப்பாடலை இணையவெளியில் தரவேற்றியிருந்ததால் தப்பித்துவிட்டது ) இந்தப்பாடலை நான் படம் முழுமையாக தயாரிக்கப்பட்டு திரையிடும் போது பதிவிடலாம் என்றிருந்தேன் ஆனால் அது இயலாதகாரியமென்பதால் திரைப்படக்குழுவினரின் அனுமதியுடன் வெளியிடுகிறேன்
இலங்கைக்கலைஞன் ஒருவனின் படைப்பை பதிவுலகில் வெளிக்கொண்டுவருவதில் மகிழ்வடைகிறேன் ,
ஆனால் ஒரு படைப்பாளியின் படைப்பு நம்மை விட்டகன்றது ஈழத்து கலைஞர்களது துரதிஸ்டம். ...
தயவுசெய்து விமர்சனம் செய்யுங்கள் ஆனால் அவர்களது மனங்களைப்பாதிக்காதவாறு ஏனெனில் அடிமேல் அடிவாங்கிய இதயத்தால் தாங்க மாட்டார்கள்.
நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
மாயா
பி.கு : இதுபற்றிய முழுமையான விபரங்களை "தாயகக்கலைஞர்கள்" வலைப்பூவில் தருகிறேன்
உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
மதியம் 9 மார்ச் 2008 சுபநேரத்திற்கு இரவு 22:42 அரங்கேற்றியது மாயாஉந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
செவியில் விழாதா?
சொந்த வீடு உனை வாவென்று அழைக்குதடா தமிழா!
அந்த நாட்களை நினை அவை நீங்குமா உனை?
நிழல் போல் வராதா?
அயல்நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!
வானம் எங்கும் பறந்தாலும் பறவை எண்ணம் தன் கூட்டில்..
உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் எண்ணம் தாய் நாட்டில்..
சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அங்கு செல்வமரம் காய்த்தாலும்..
உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா?
உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
செவியில் விழாதா?
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!
கங்கை உனை அழைக்கிறது
யமுனை உனை அழைக்கிறது
இமயம் உனை அழைக்கிறது
பல சமயம் உனை அழைக்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க..
சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க..
தென்னந்தோப்பு துரவுகள் அழைக்க..
கட்டிக்காத்த உறவுகள் அழைக்க..
நீ தான் தின்ன நிலா சோறு தான் அழைக்க..
உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
செவியில் விழாதா?
சொந்த வீடு உனை வாவென்று அழைக்குதடா தமிழா!
பால் போல் உள்ள வெண்ணிலவு..
பார்த்தால் சிறு கறையிருக்கும்..
மலர் போல் உள்ள தாய்மண்ணில்..
மாறாத சில வலி இருக்கும்..
கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்..
அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்..
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே..
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே..
அன்பு தாயின் மடி உனை அழைக்குதே தமிழா!
உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!
செவியில் விழாதா?
சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!..
சூர்யா & அசின் சிங்களப்பாடலொன்றுக்கு நடனமாடுகின்றனர் [ Remix ]
மதியம் 27 பிப்ரவரி 2008 சுபநேரத்திற்கு மதியம் 01:47 அரங்கேற்றியது மாயாசரி இனி பாடலைப்பர்த்து,கேட்டு ரசியுங்கள் என் Remixஐப்பற்றி பினனூட்டமொன்றைப்போட்டுவிடுங்களேன் . . . .
நம் ஊரை மறந்து போய் பட்டணம் ஓடிப்போனால் . . . . [ இலங்கைக்கலைஞர்களின் இனிய கண்ணொளி ]
சுபநேரத்திற்கு மதியம் 01:39 அரங்கேற்றியது மாயா" நம் ஊரை மறந்து போய் பட்டணம் ஓடிப்போனால் . .
இந்த ஊரு அருமையெல்லாம் யார் உனக்கு சொல்லித்தருவார் ?
மண்வாசனை அருமையெல்லாம் உன்னை விட்டு விலகிப்போச்சா ?
உன்கூட எப்பவும் இருக்கும் இந்தஊரின் வாசனை தான் ! "
அருமையான பாடல்வரிகள் இப்போதைய தலைமுறையினருக்கு தோவையான வரிகள் அவற்றை அவர்கள் பாணியில் கொடுத்துள்ளனர்
இலங்கையின் இளையதலைமுறை கலைஞர்களின் (சிங்கள,தமிழ்) கைவண்ணம் .
பாடகர்கள் பெயர் கஜன் மற்றும் டினேஸ்
இசை பாடல்வரிகள் காட்சிக்கலப்பு Graphics என அனைத்தும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது
இவர்கள் ஆக்கி வெளியிட்ட இந்த பாடல் மூலமாக கணிசமானஅளவில் சிங்கள தமிழ் இரசிகர் வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டனர் .
" மாயாவின் அரங்கம் " திறப்பு விழா
சுபநேரத்திற்கு மதியம் 01:11 அரங்கேற்றியது மாயாஅனைவரும் அன்புடன் வருக !
கடந்த 2007 மே மாதம் முதல் எழுத்துமூலமாக மட்டுமே உங்களை அடைந்து வந்த நான் இன்று முதல் வீடியோக்களின் தொகுப்பின் மூலம் உங்களை அடையவிருக்கிறேன் ஏலவே இல் சில கண்ணொளிகளைத்தரவேற்றியிருந்தாலும் நண்பர்களின் வேண்டுகோளுக்கமைய கண்ணெளிகளுக்கென தனியானதொரு வலைப்பூவினை உருவாக்கி இன்று திறப்புவிழாவும் வைத்தாயிற்று !
இது உங்களாலேயே சாத்தியமாகியது
இங்கு இன்னொன்றையும் குறிப்பிடவேண்டும் கானா பிரபா அண்ணா றேடியோஸ்பதிமூலம் நேயர்விருப்பங்களைத்தருவது போல் இங்கும் நீங்கள் கேட்கும் வீடியோ பாடல்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன ஆகையால் உங்கள் விருப்பப்பாடலை மின்னஞ்சல் மூலமாகவோ இல்லை பின்னூட்டங்கள் மூலம தெரிவிக்கலாம் அவற்றை விரைவில் நாம் இவ்வரங்கில் திரையிடுவோம் ! அதேவேளை இங்கே வாராவாரம் " வலைப்பதிவர்களுக்காக எங்கள் தெரிவுகள் " பாடல் தெரிவுகளும் தரவேற்றப்படும் .
இதைஓர் கூட்டுப்பதிவாக்கும் எண்ணமுமிருக்கிறது
நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
மாயா
சரி சரி திறப்புவிழாவில்முதலில் மூத்தோர்களின் குரலில் சில உரைகள் . . .
* முதலாவதாக எனக்கு மிகவும் பிடித்த அஹிம்சா போராட்டத்தின் மாபெரும் சக்தி மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் ஆற்றிய பிரபலமான "எனக்கொரு கனவுண்டு” (I have a dream ) சொற்பொழிவின் சிறுதுளி (வாஷிங்டன் பேரணி நிகழ்ந்து )
* இது விவேகானந்தரின் சிக்காகோ சொற்பொழிவு