இலங்கை மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களின் திரைப்படப்பாடல் வெளியீடு

இலங்கை மொரட்டுவை பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் சிலரது சொந்த முயற்சியால் திரைப்படம் முயற்சியை இவ்வருட ஆரம்பத்தில் தெரடக்கியிருந்தனர் . அந்த வகையில் அதற்கான ஆரம்பக்கட்ட வெளிப்புறப்படப்பிடிப்புக்கள் யாவும் முடிவடைந்த நிலையில் பாடல்களை அண்மையில் வெளிடயிட்டிருந்தனர் ஆனால் துரதிஸ்டவசமாக அண்மையில் மொரட்டுவைப்பகுதியில் ஏற்ட்ட நிகழ்வுகளால் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன (இந்தப்பாடலை இணையவெளியில் தரவேற்றியிருந்ததால் தப்பித்துவிட்டது ) இந்தப்பாடலை நான் படம் முழுமையாக தயாரிக்கப்பட்டு திரையிடும் போது பதிவிடலாம் என்றிருந்தேன் ஆனால் அது இயலாதகாரியமென்பதால் திரைப்படக்குழுவினரின் அனுமதியுடன் வெளியிடுகிறேன்

இலங்கைக்கலைஞன் ஒருவனின் படைப்பை பதிவுலகில் வெளிக்கொண்டுவருவதில் மகிழ்வடைகிறேன் ,
ஆனால் ஒரு படைப்பாளியின் படைப்பு நம்மை விட்டகன்றது ஈழத்து கலைஞர்களது துரதிஸ்டம். ...
தயவுசெய்து விமர்சனம் செய்யுங்கள் ஆனால் அவர்களது மனங்களைப்பாதிக்காதவாறு ஏனெனில் அடிமேல் அடிவாங்கிய இதயத்தால் தாங்க மாட்டார்கள்.

நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
மாயா

பி.கு : இதுபற்றிய முழுமையான விபரங்களை "தாயகக்கலைஞர்கள்" வலைப்பூவில் தருகிறேன்

அரங்கேற்றிய வகைகள் |

6 கைதட்டல்(கள்):

 1. எம்.ரிஷான் ஷெரீப் Says:

  முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பர்களே :)

 2. கானா பிரபா Says:

  ;-)

 3. இறக்குவானை நிர்ஷன் Says:

  மாயா, சில மாதங்களாக வேலை அதிகமாக இருந்ததால் பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை.

  ஈழத்துப்படைப்பு என்றவுடன் பார்க்கத் தோன்றியது.

  பாடல் நன்றாக இருக்கிறது. மாணவர்களின் வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள். விரைவில் இவர்களின் ஏனைய படைப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.

 4. நிமல்/NiMaL Says:

  :)

 5. மாயா Says:

  அனைவரினதும் வரவுகளுக்கும் பின்னூட்டடங்களுக்கும் நன்றிகள் !!!

 6. நந்தவனத்து ஆண்டி Says:

  ம் ம் . . . .

  நம் தாயகத்திலிருந்தும் ஒருசில படைப்பாளிகளையம் சமுகமும் ,நாட்டுநிலமையும் விடாது போல . .