இலங்கை மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களின் திரைப்படப்பாடல் வெளியீடு

இலங்கை மொரட்டுவை பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் சிலரது சொந்த முயற்சியால் திரைப்படம் முயற்சியை இவ்வருட ஆரம்பத்தில் தெரடக்கியிருந்தனர் . அந்த வகையில் அதற்கான ஆரம்பக்கட்ட வெளிப்புறப்படப்பிடிப்புக்கள் யாவும் முடிவடைந்த நிலையில் பாடல்களை அண்மையில் வெளிடயிட்டிருந்தனர் ஆனால் துரதிஸ்டவசமாக அண்மையில் மொரட்டுவைப்பகுதியில் ஏற்ட்ட நிகழ்வுகளால் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன (இந்தப்பாடலை இணையவெளியில் தரவேற்றியிருந்ததால் தப்பித்துவிட்டது ) இந்தப்பாடலை நான் படம் முழுமையாக தயாரிக்கப்பட்டு திரையிடும் போது பதிவிடலாம் என்றிருந்தேன் ஆனால் அது இயலாதகாரியமென்பதால் திரைப்படக்குழுவினரின் அனுமதியுடன் வெளியிடுகிறேன்

இலங்கைக்கலைஞன் ஒருவனின் படைப்பை பதிவுலகில் வெளிக்கொண்டுவருவதில் மகிழ்வடைகிறேன் ,
ஆனால் ஒரு படைப்பாளியின் படைப்பு நம்மை விட்டகன்றது ஈழத்து கலைஞர்களது துரதிஸ்டம். ...
தயவுசெய்து விமர்சனம் செய்யுங்கள் ஆனால் அவர்களது மனங்களைப்பாதிக்காதவாறு ஏனெனில் அடிமேல் அடிவாங்கிய இதயத்தால் தாங்க மாட்டார்கள்.

நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
மாயா

பி.கு : இதுபற்றிய முழுமையான விபரங்களை "தாயகக்கலைஞர்கள்" வலைப்பூவில் தருகிறேன்