குசேலன் - கண்ணொளிக்காட்சிகளுடன் விமர்சனம்முன்னொரு காலத்தில யாழ்ப்பாணத்தில படத்துக்கு போறெண்டா ஒரு இருபது பேர் மட்டில போவம் ஆனால் இப்ப நாடு கடந்ததால கொஞ்சப்பேர்தான் (கிட்டத்தட்ட 10 பேர் ).நாடு மாறினாலும் Super Star படம் என்பதால காசைக்கூடப்பார்க்காமல் போனம் கிட்டத்தட்ட செலவாச்சு :( தியட்டரில கூட்டத்துக்கு குறைவில்லை என்டு சொல்லலாம் சரி சரி படத்துக்கு வருவம் . படத்தில நான் சொல்லுறதுக்கு பெரிசா ஒன்றுமில்லை அத்தோட இன்னோர் கலைஞனின் படைப்பை குறை சொல்வதில் விருப்பமுமில்லை அதிலும் மனதிற்கு பிடித்த பிடிக்காதவற்றை உங்களுடன் பகிர்கிறேன்

* நட்பின் பெருமையை கூறும் வகையில் வந்திருக்கும் இன்னொரு படம் குசேலன்.


* படத்தில் பசுபதி நடிப்பில் வெளுத்து கட்டியிருக்கிறார்

* பாடலொன்றில் இயக்குனர் முதல் தேனீர் கொடுப்பவா்கள் வரை காட்டியிருப்பது அழகு (Om Shanthi Om இலும் இறுதியில் காட்டுவார்கள் அது வேற கதை)

* சூப்பர் ஸ்டார் என்ற அற்புதமான என்ற அற்புதமான மனிதர் வீணடிக்கப்பட்டிருக்கிறார்

* வடிவேலுவின் காமெடி பயங்கரமோசம் .. நயன்தாராவின் அந்தரங்க அறைக்குள் வடிவேலு மறைந்திருந்து பார்ப்பதும், நயன்தாரா கண்ணாடி முன்பாக . . . . . . . . . . . . வாசு படம் மாதியே தெரியவில்லை

* சந்தானத்தின் மற்றும் லிவிங்ஸ்டன் மற்றும் சகபாடிகளின் ஓரிரு காமெடிகள் பரவாயில்லை. (சந்தான பாரதி ரெம்பப்பாவம்)

* கடைசியில் மைக் முன்பாக ரஜினி பேசும் ஐந்து நிமிட வசனமும், ரஜினியை புகழ்ந்து ஆசிரியர்கள் ஒவ்வொருவராக நீண்ட வசனம் பேசுவதும் விஜயகாந்த் படங்களை நினைவூட்டுகிறது

* அருமையான இசையை காட்சிகளால் வீணடித்துள்ளார்கள் உதாரணமாக சூப்பர் ஸ்டாரின் அறிமுகப் பாடல் அதில் Graphics என்று அசிங்கப்படுத்தியுள்ளனர்

* மொத்தத்தில் நடிகளா பிரபு நிலமை ரெம்ப மோசம்ம்ம்ம்ம் :((

குசேலன் சும்மா எதிர்பார்ப்புக்கள் எதுவுமின்றி போனால் பார்க்கலாம்

அரங்கேற்றிய வகைகள் , |

7 கைதட்டல்(கள்):

 1. Trisha Says:

  எப்ப நீங்கள் திருந்தப்போகிறீர்கள். இந்த விசரன் ரஜனிபடத்தை பார்த்து அந்த நாயை ஏன் ஊக்குவிக்கிறீர்கள், உண்மையான தமிழ் உணர்வு இருப்பவர்கள் எவரும் இந்தப் படத்தைப் புறக்கணிக்கணும். ஈழத்தமிழர்கள் திருந்தவே மாட்டார்கள்.

 2. Vinavu Says:

  http://vinavu.wordpress.com

 3. மாயா Says:

  Trusha ! உண்மையான தமிழ் உணர்வு உள்ளவன் இத்திரைப்படத்தைப்பார்க்கக்கூடாது என்பதற்கு காரணம் ஏதாவது சொல்லுங்கள் பார்ப்பம் ? ? ? ?

  அத்தோட ஈழத்தமிழன் பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது எனத்தெரிந்து கொள்ளலாமா ?

 4. மதுவதனன் மௌ. Says:

  எனக்கும்தான் புரியவில்லை மாயா...புறக்கணி புறக்கணி என்று அர்த்தமில்லாத சில கூச்சல்களை எல்லாஇடமும் பார்க்கிறேன். அதைவிட தேவையான எத்தனையோ விடயங்கள் செய்யப்படவேண்டிய நிலையில் இருக்க ஏன் இந்தக் கூச்சல் என்றுதான் விளங்கவில்லை. இப்படிப் செய்வன செய்ய்யாமல் புறக்கணித்துத்தான் ஈழத்தமிழன் திருந்தவேண்டுமெனின் அவன் திருந்தாமல் இருப்பது மேல் என்றே எனக்குப் படுகிறது.

  மதுவதனன் மௌ.

 5. மாயா Says:

  மதுவதனன் உங்கள் கருத்து வரவேற்க்கத்தக்கது இதுபற்றி நான் ஒரு பதிவெழுதவிருக்கிறேன் . . .

  இவ்வாறான கருத்தை Trisha மட்டுமன்றி வேறும் சிலரும் அனாகரிக பின்னூட்டமிட்டிருந்தனர் அதை நான் Publish பண்ணவில்லை . . .

  நன்றியடன்
  மாயா

 6. யாழ்பாடி Says:

  மாயா மற்றும் மது அவர் ஒன்று தெரிஞ்சுகொள்ள வேண்டும் ஈழத்தத்தமிழர்களின் வீரத்தை ஒருவரும் குறைக்கமுடியாதென்டு . ..

  அந்தக்காலத்தில "மன்மதராசா மன்மதராசா " பாடிக்கோண்டிருந்த மக்கள்தான் "பொங்குதமிழ் " என்டு ஒன்றை நடத்தி
  தமிழ் மக்களின் பலத்தை வெளிக்காட்டினார்கள்

  ஆகவே

  பணிவுடன் கேட்டுக்கோள்கிறேன்
  தயவுசெய்து இந்தக்கதையை விட்டுவிடுங்கள் . . .

  நன்றியுடன்
  யாழ்பாடி

 7. நந்தவனத்து ஆண்டி Says:

  ஈழத்திரைப்பட ரசிகர்கள்
  எல்லாக் காலமும் இருந்துள்ளார்கள்.
  பட்டினி கிடந்தும் படம் பார்ப்போர், என்றும் இருந்துள்ளார்கள்.
  இன்று இருந்தால் ஆச்சரியமில்லை.
  அவர்களைப் படம் பார்க்கக் கூடாதெனக் கூற
  நமக்கு அருகதையில்லை.
  எல்லாவற்றையுமே அரசியலாக்கக் கூடாது.
  இந்த அர்ப்ப சந்தோசத்தைக் கூட அவர்களுக்குக் கிடைக்கக் கூடாதென நினைப்பதில் நாயமில்லை.
  இது சர்வாதிகாரம் மனப்போக்கு.

  நன்றியுடன்
  நந்தவனத்து ஆண்டி