" மாயாவின் அரங்கம் " திறப்பு விழா

அனைவரும் அன்புடன் வருக !

கடந்த 2007 மே மாதம் முதல் எழுத்துமூலமாக மட்டுமே உங்களை அடைந்து வந்த நான் இன்று முதல் வீடியோக்களின் தொகுப்பின் மூலம் உங்களை அடையவிருக்கிறேன் ஏலவே இல் சில கண்ணொளிகளைத்தரவேற்றியிருந்தாலும் நண்பர்களின் வேண்டுகோளுக்கமைய கண்ணெளிகளுக்கென தனியானதொரு வலைப்பூவினை உருவாக்கி இன்று திறப்புவிழாவும் வைத்தாயிற்று !

இது உங்களாலேயே சாத்தியமாகியது

இங்கு இன்னொன்றையும் குறிப்பிடவேண்டும் கானா பிரபா அண்ணா றேடியோஸ்பதிமூலம் நேயர்விருப்பங்களைத்தருவது போல் இங்கும் நீங்கள் கேட்கும் வீடியோ பாடல்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன ஆகையால் உங்கள் விருப்பப்பாடலை மின்னஞ்சல் மூலமாகவோ இல்லை பின்னூட்டங்கள் மூலம தெரிவிக்கலாம் அவற்றை விரைவில் நாம் இவ்வரங்கில் திரையிடுவோம் ! அதேவேளை இங்கே வாராவாரம் " வலைப்பதிவர்களுக்காக எங்கள் தெரிவுகள் " பாடல் தெரிவுகளும் தரவேற்றப்படும் .

இதைஓர் கூட்டுப்பதிவாக்கும் எண்ணமுமிருக்கிறது

நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
மாயா

சரி சரி திறப்புவிழாவில்முதலில் மூத்தோர்களின் குரலில் சில உரைகள் . . .

* முதலாவதாக எனக்கு மிகவும் பிடித்த அஹிம்சா போராட்டத்தின் மாபெரும் சக்தி மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் ஆற்றிய பிரபலமான "எனக்கொரு கனவுண்டு” (I have a dream ) சொற்பொழிவின் சிறுதுளி (வாஷிங்டன் பேரணி நிகழ்ந்து )

* இது விவேகானந்தரின் சிக்காகோ சொற்பொழிவு


அரங்கேற்றிய வகைகள் |

14 கைதட்டல்(கள்):

 1. கானா பிரபா Says:

  ஆகா நீங்களும் படங்காட்ட வெளிக்கிட்டிட்டியளே, வாழ்த்துக்கள்

 2. இறக்குவானை நிர்ஷன் Says:

  வாழ்த்துக்கள் மாயா. நாமும் உங்களோடு....

 3. மாயா Says:

  // ஆகா நீங்களும் படங்காட்ட வெளிக்கிட்டிட்டியளே, //

  ஓம் அண்ணா படங்காட்ட வெளிக்கிட்டாச்சு தான் . . . ஆனாலும் இலங்கைப்பாடல்கள்,ஆக்கங்கள் தான் அரங்கத்தில அதிகளவு ஓடும் :)

  அண்ணா இன்னோர் விடையம் இலங்கைத்தமிழ்த்திரைப்படங்களின் [செம்மீன் , சர்மிளாவின் இதயராகம் போன்ற . .]பாடல்களை எங்கு பெறலாம் [தரவிறக்கலாம்] ஒலிவடிவமாக, அல்லது கண்ணொளியாக.

  கொஞ்சம் கஷ்டமானது :(
  தான் என்டாலும் கேட்கிறன்

 4. மாயா Says:

  // வாழ்த்துக்கள் மாயா. நாமும் உங்களோடு.... //

  நிச்சயமாக . .

  கலைஞர்கள் வலைப்பூ பார்த்தீர்களா ?

 5. கானா பிரபா Says:

  இலங்கைத்தமிழ்த்திரைப்படங்களின் //[செம்மீன்//

  ???

 6. இறக்குவானை நிர்ஷன் Says:

  ஆமாம் மாயா. நன்றி

 7. காண்டீபன் Says:

  உங்கள் அரங்கத்தில் மக்கள் கூட்டம் நிறைய வாழ்த்துக்கள்...

 8. மாயா Says:

  அண்ணா செங்கைஆழியான் கதைக்கு உயிருட்டிய படம் வாடைக்காற்று என்பது செம்மீன் என்று மாறி வந்து விட்டது

  பிழைக்கு பொறுத்தருளவும் :)

 9. மாயா Says:

  காண்டீபன் , நிர்ஷன் அரங்கத்திற்கு வந்தமைக்கு நன்றிகள்

 10. மலைநாடான் Says:

  நன்றே தொடர்க!

 11. மாயா Says:

  அப்படியே ஆகட்டும் மலைநாடான்

 12. மாயா Says:

  விட்டுப்போன ஒன்று . . .

  அரந்கத்தில் நிஷாந்தன் ஜெயாவை இணைக்கிறேன்

 13. பகீ Says:

  மாயா படம் காட்டுறாரு வாங்கோ.... வாங்கோ....

  வாழ்த்துக்கள் மாயா..

 14. மாயா Says:

  ஓம் பகி தொடங்கியாச்சு . .

  கட்டியிளுக்கறது தான் கஷ்டம் போல தெரிகிறது

  பார்ப்பம் . . . :))