என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா.....
மதியம் 1 ஜனவரி 2012 சுபநேரத்திற்கு இரவு 17:02 அரங்கேற்றியது மாயாபாடல் வரிகள்
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…
கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!
தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…
எழுத்து,இசை:எஸ்.ஜே.ஸ்ரலின்.
Atputham.samy
கொலை வெறி பாடலுக்குக் கலைநயம் மிக்க பதிலடி
பல அடிகளில்.
நன்று நன்று மிக நன்று!
உங்கள் பணி பெரும பாராட்டுக்கு உரியது !
மனம நிறைந்த பாராட்டுகள்
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
பிரான்சு
சிறந்த பாடல், இசை, கருத்து.
கேட்டு மகிழ்ந்தோம்.
நன்றி
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
ஹூசுட்டன்
ஜனவரி 1, 2012
Good presentation .. but the soup song by danush should not have been taken this much as an offence against TAMIL LANGUAGE. a HISTORIAN OR A LITERATE DO ACCEPT THAT THESE WILL HAPPEN AS A PROCESS IN ANY SOCIETY PURPOSELESSLY .
Many events in history have reached unreasonably a fame just by way of slipping from the normal, formal course of patterns. even thirukkural -I believe once recieved criticism that the form is not full but only one and a half line -a metre - peculiar ,odd at that age
I do enjoy that hundreds of versions in kolavery style- shoot up following first kola veri of danush ..Danush cannot be accused nor his team but only others who promote any stuff in the same style just for making money -any further .-VAASUNATHAN CHENNAI
கவிஞரின் உணர்வில் உணர்ச்சியில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்!
மிக நன்று!
தமிழன் காசில் வளர்ந்தவர்கள் தமிழுக்கு செய்யும் துரோகம் மன்னிக்க முடியாதது
நனறு. நன்று. பல பாடல்கள் இப்படி வந்தாலும் வெறியர்கள் திருந்தப் போவதில்லை. எனினும் புதிய தலைமுறையினர் அன்பர்களாக உருவாவர். பணி தொடரட்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
அருமையான முயற்சி! அருமையான இசை! கொலைவெறி மீதான உங்கள் கொலைவெறி வாழ்க!
a very good song line lyrics kallakunga
பாட்டுக்கு பாட்டாலே பதில் சொன்ன உங்களுக்கு அனைத்து உண்மையான தமிழ் நெஞ்சங்கள் சார்பாக நன்றி.
indha padalil enge thamizh irukkindradhu (kolaveri)thavira
பாட்டுக்கு பாட்டாலே பதில் சொன்ன ஔவையார் நினைவு வந்தது எனக்கு.
பாட்டுக்கு பாட்டாலே பதில் சொன்ன ஔவையார் கதை நினைவுக்கு வந்தது உங்கள் பாடலை கேட்டபோது. பாடல் வரிகளை படத்துடன் இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
அருமையான முயற்சி! பாராட்டுக்கள்!
என்னிடம் தமிழ் பயிலும் அனைத்து மாணவர்களிடமும் இதைக் கொண்டு சேர்ப்பேன்.
பொன் மாணிக்கம்
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
சிங்கப்பூர்
தரங்கெட்ட தமிழர் சிலரின் 'கொலைவெறியால்' துவண்டுபோயிருந்தேன். புத்தெழுச்சிமிக்க இந்தப் பாடல் அந்தச் சோர்வைப் போக்கிவிட்டது. இப்படைப்புக்கு ஆதாரமாய் விளங்கியோர்க்கு இந்தச் சிங்கைத் தமிழனின் சிரந்தாழ்ந்த நன்றி உரித்தாகட்டும்.
பாடலும், பதிவு செய்த விதமும் அருமை ! பாராட்டுக்கள் !
இந்தப் பாடலை இவ்ளோ சீரியசா எதுக்கு எடுத்துக்குறாங்கன்னு தெரியல ! இன்னும் சொல்லப் போனால் இது தமிழ் பாடலே இல்லை ! அப்படியிருக்கு என்ன தமிழ் கொலை இருக்கு இதுல!
பிழைப்பிற்காகத் தமிழைப் பயன்படுத்துவது ஒன்றும் புதிதில்லை.
கொலைவெறியைப் பற்றி கொலைவெறியோடு அலையவேண்டியதில்லை.
இந்த ஒருபாட்டால்தான் தமிழ்மொழி ஒழிந்துப்போகும் என்றால் அது மொழியே கிடையாது. நான் ஒருவன் இந்தப் பாடலைக் கண்டித்து ஒப்பாரிவைப்பதால் இந்த மொழியின் இருத்தலை உறுதிசெய்ய முடியாது.
Linguistic competence is different from Linguistic performance.