சூர்யா & அசின் சிங்களப்பாடலொன்றுக்கு நடனமாடுகின்றனர் [ Remix ]

நான் யாழ்ப்பாணத்திலிருந்த காலத்தில் திரைப்பாடல்களக்கு Remix செய்வதுண்டு அந்த (வெட்டி)வேலையை தலைநகர் வந்தபின் நிறுத்தியிருந்தேன். ஆனால் ஆடியகாலும் பாடிய வாயும் சும்மாயிருக்காது என்பார்களே அதுபோல் மீண்டும் திரைப்பாடல்களக்கு ரீமிக்ஸ் செய்துவருகிறேன் அவ்வாறு Remix செய்த பாடலொன்று தான். இது சூர்யாவும் அசினும் சிங்களப்பாடலொன்றுக்கு நடனமாடுகின்றனர் இலங்கையில் பிரபலமான சிங்களப்பாடல்களில் இதுவும் ஒன்று கவனமாகக்கவனித்தீர்களாயின் பாட்டின் அரைவாசியிலிருந்து தமிழில் பாடல் தொடர்வதைக்கேட்கலாம் . (சிங்களப்பாடல்களின் இடையே தமிழ்வரிகளை இணைப்பது சிங்களக்கலைஞர்களின் இப்போதைய Fashion )


சரி இனி பாடலைப்பர்த்து,கேட்டு ரசியுங்கள் என் Remixஐப்பற்றி பினனூட்டமொன்றைப்போட்டுவிடுங்களேன் . . . .

அரங்கேற்றிய வகைகள் | 3 கைதட்டல்(கள்)

நம் ஊரை மறந்து போய் பட்டணம் ஓடிப்போனால் . . . . [ இலங்கைக்கலைஞர்களின் இனிய கண்ணொளி ]

" நம் ஊரை மறந்து போய் பட்டணம் ஓடிப்போனால் . .
இந்த ஊரு அருமையெல்லாம் யார் உனக்கு சொல்லித்தருவார் ?
மண்வாசனை அருமையெல்லாம் உன்னை விட்டு விலகிப்போச்சா ?
உன்கூட எப்பவும் இருக்கும் இந்தஊரின் வாசனை தான் ! "
அருமையான பாடல்வரிகள் இப்போதைய தலைமுறையினருக்கு தோவையான வரிகள் அவற்றை அவர்கள் பாணியில் கொடுத்துள்ளனர்


இலங்கையின் இளையதலைமுறை கலைஞர்களின் (சிங்கள,தமிழ்) கைவண்ணம் .
பாடகர்கள் பெயர் கஜன் மற்றும் டினேஸ்
இசை பாடல்வரிகள் காட்சிக்கலப்பு Graphics என அனைத்தும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது

இவர்கள் ஆக்கி வெளியிட்ட இந்த பாடல் மூலமாக கணிசமானஅளவில் சிங்கள தமிழ் இரசிகர் வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டனர் .

" மாயாவின் அரங்கம் " திறப்பு விழா

அனைவரும் அன்புடன் வருக !

கடந்த 2007 மே மாதம் முதல் எழுத்துமூலமாக மட்டுமே உங்களை அடைந்து வந்த நான் இன்று முதல் வீடியோக்களின் தொகுப்பின் மூலம் உங்களை அடையவிருக்கிறேன் ஏலவே இல் சில கண்ணொளிகளைத்தரவேற்றியிருந்தாலும் நண்பர்களின் வேண்டுகோளுக்கமைய கண்ணெளிகளுக்கென தனியானதொரு வலைப்பூவினை உருவாக்கி இன்று திறப்புவிழாவும் வைத்தாயிற்று !

இது உங்களாலேயே சாத்தியமாகியது

இங்கு இன்னொன்றையும் குறிப்பிடவேண்டும் கானா பிரபா அண்ணா றேடியோஸ்பதிமூலம் நேயர்விருப்பங்களைத்தருவது போல் இங்கும் நீங்கள் கேட்கும் வீடியோ பாடல்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன ஆகையால் உங்கள் விருப்பப்பாடலை மின்னஞ்சல் மூலமாகவோ இல்லை பின்னூட்டங்கள் மூலம தெரிவிக்கலாம் அவற்றை விரைவில் நாம் இவ்வரங்கில் திரையிடுவோம் ! அதேவேளை இங்கே வாராவாரம் " வலைப்பதிவர்களுக்காக எங்கள் தெரிவுகள் " பாடல் தெரிவுகளும் தரவேற்றப்படும் .

இதைஓர் கூட்டுப்பதிவாக்கும் எண்ணமுமிருக்கிறது

நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
மாயா

சரி சரி திறப்புவிழாவில்முதலில் மூத்தோர்களின் குரலில் சில உரைகள் . . .

* முதலாவதாக எனக்கு மிகவும் பிடித்த அஹிம்சா போராட்டத்தின் மாபெரும் சக்தி மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் ஆற்றிய பிரபலமான "எனக்கொரு கனவுண்டு” (I have a dream ) சொற்பொழிவின் சிறுதுளி (வாஷிங்டன் பேரணி நிகழ்ந்து )





* இது விவேகானந்தரின் சிக்காகோ சொற்பொழிவு


அரங்கேற்றிய வகைகள் | 14 கைதட்டல்(கள்)