சினிமா சினிமா சினிமா அனுபவப்பகிர்வு

வணக்கம் வணக்கம் வணக்கம் பதிவெளுதி கன காலமாச்சு . . . இலங்கையிலிருந்து வெளிக்கிட்டதிலயிருந்து இன்று வரை முழுமையானதொரு பதிவினை எழுதவில்லை(அங்கையிருக்கேக்க ஏதோ எழுதிக்கிழிச்சதோ என்டு கேட்கிறது கேட்குது !!!) ஆனாலும் பின்னூட்டங்களையும் அங்கைஇங்கையென்டு போட்டுத்தாக்கிக்கொண்டு வந்ததோட சில பதிவுகளையும் போட்டிருக்கிறன் .

அண்மையில் தொடங்கின சினிமா தொடர்பான தொடர்பதிவில் அண்மையில் நட்சத்திரப்பதிவரான இலங்கையைச்சர்ந்த வந்தியத்தேவன் அவர்கள் சங்கிலித் தொடர் கேள்வி பதிலுக்கு பதிவெழுத அழைத்திருந்தார் அவருக்கு முதலில் நன்றிகள். இனி தொடருக்கு வாறன்

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
சினிமா பாக்கத்தொடங்கியது எந்தவயதென்றெல்லாம் சரியாகத்தரியாது. ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும் பாண்டியராஜன் ஊர்வசி நடித்த "பாட்டி சொல்லைத் தட்டாதே" என்ற திரைப்படத்தை யாழ்ப்பாணத்தில் இருந்த பன்னிரண்டு திரையரங்குகளில் எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கிறது அனேகமா வெலிங்ரன் திரையரங்கா இருக்கவேணும். அதில் வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா ஆகியோர் பாடிய "வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சு" பாடல் அந்தக் காலகட்டத்தில் மிகவும் பிரபலம். நாங்களும் படம் பார்த்த அடுத்த ஒரு கிழமை போற வாற இடமெல்லாம் பாடிக்கொண்டு திரிஞ்சம் :) . இது தவிர அளவெட்டியில் என் பாட்டா வீட்டில் தொலைக்காட்சி மூலம் தூரதர்சனில் ஒளிபரப்பான படங்களை பார்ப்பதுண்டு அதுவும் பனி காலமென்டால் தெளிவா வேலை செய்யமென்று கணிப்புமுண்டு அந்தக்காலகட்டத்தில் எங்களூரிலிருந்து மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைக்குப்போனேர்கள் தங்கள் அந்தஸ்தைக்காட்ட பெரிய தொலைக்காட்சிப்பெட்டியெல்லாம் அனுப்பிவைப்பர் அனால் அவற்றை பாவிக்கத்தரியாமல் அவர்களது உறவினர்கள் அல்லாடிய தருணங்கள் எல்லாம் இப்போ நினைவுக்கு வருகிறது .இன்னுமொன்றையும் சொல்லவேணும். அந்த நாளில் வில்லன்கள் என்றால் கெட்டபெயர் இருக்கும் அவர் தோன்றும் காட்சிகளில் அவருக்கு பேச்செல்லாம் நடக்கும். உதாரணமாக நம்பியார் என்றவர் மிகவும் கெட்டவராக கணிக்கப்பட்டார்.சிறிது காலங்களுக்கு பின் என் மத்திய கிழக்கு சித்தப்பாக்கள் அனுப்பிய ஒளிநாடாக்கள் மூலம் சார்லி சப்லீன் (charli-chaplin) அவர்களைக் கண்டு கொண்டேன் அதன் பின் அவரது தீவிர விசிறியாகிவிட்டேன்

2.என்ன உணர்ந்தீர்கள்?
அந்த வயதில் உணர என்ன இருக்கு. தியேட்டரில் பெரிதாக படம் பார்க்க பயமாகவும் பிரமிப்பாகவும் இருந்தது .

3.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சூப்பர் ஸ்ராரின் குசேலன் ! இந்தப்படத்திற்காக செலவளித்தது கிட்டத்தட்ட இலங்கைக்காசில 15000/= க்கு மேல். ஆனால் ரஜினியும் வாசுவும் வைத்தார்கள் ஆப்பு. வெறுத்தே பொயிட்டுது. இதைப் பார்த்த பின் இனிமேல் எந்த தமிழ் சினிமாவையும் தியேட்டருக்கு போய் பார்க்கக்கூடாது என நண்பர்கள் நாம் முடிவெடுத்துக்கொண்டோம் எவ்வளவு நாள் தான் சபதம் நீடிக்குமோ தெரியல்ல.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தினம் தினம் TubeTamil, Aarampam, TamilO உபயத்தில் ஏதாவது ஒரு படம் முழுமையாகவோ அல்லது அரைகுறையாகவோபார்ப்பதுண்டு அந்த வகையில் கடைசியாகப்பார்த்த திரைப்படம் சக்கரக்கட்டி. என்ன உணரக்கிடக்கு ? இப்படியெல்லாம் படமெடுக்கிறாங்களே எண்டு தான் ! ரகுமான் இசைஇருக்கு சிறந்த ஒளிப்பதிவிருக்கு ஏன் நடிக நடிகைகளும் பரவாயில்லை ஆனால் கதையை மட்டும் காணேல்ல !

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
தாக்கிய சினிமா என்றால் இரண்டு வகையா பிரிக்கலாம் அழகிய தமிழ்மகன் மற்றும் குருவி ரகம் போன வருடம் தீபாவளியன்று டாக்டர் விஜயோட அழகிய தமிழ்மகன் திரைப்படத்தை ஏழு மணிநேரம் கால் கடுக்க கொழும்பு சினிசிட்டி திரையரங்குக்கு முன் நின்று பார்த்தது ! தாக்கினாங்க நம்மளை ! இது பற்றிய பதிவொன்று இங்கே ! அடுத்தது, குருவி அதைப்பற்றி என்னென்டு சொல்லுறது :(

மற்றயது திருவிளையாடல், இராமாயணம் போன்ற அந்தக்காலத்தில் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட திரைப்படங்கள் எப்படித்தான் எடுத்திருப்பார்களே தெரியாது கடுமையான உழைப்பு தெரியும்.

5.உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?
பாபா திரைப்படம் தொர்பான சர்ச்சை

6.தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
சிறு வயதில் பத்திரிகையில் வரும் ஆக்கங்களை வாசிப்பதுண்டு குறிப்பாக வீரகேசரி வார இதழில் வரும் சினிமா பகுதியை நிச்சயம் வாசிப்பதுண்டு தற்பேது இணையத்தில் அதிக நேரம் வலம்வருவதால் அனேக சினிமா வலைப்பூக்களை வாசிப்பதுண்டு

7.தமிழ் சினிமா இசை?
முன்பு எம் எஸ் விஸ்வநாதனின் பாட்டுக்கள் பின் ரகுமான் தற்போதும் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களுடைய பல கிரமபோன் தட்டுக்கள் வீட்டிலிருக்கின்றன.

8.தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தமிழ் தவிர ஆங்கில இந்தி படங்களை பார்ப்பதுண்டு. நான் சிறுவயது தொடக்கம் சார்லி - சப்லின் அவர்களது ரசிகன் அது தவிர யாழ்நகரில் திரையரங்கில் பார்த்த வேற்றுமொழிப்படம் (ஆங்கிலப்படம் தான் )Steven Spielberg இயக்கிய Jurassic Park, யாழ்ப்பாணத்தில் சிறீதர் திரையரங்கில் பார்த்தது. அதிகம் தாக்கியதென்றால் என்றSanjay Leela Bhansali. இயக்கிய Black என்ற இந்திப்படம். இப்படியெல்லாம் படமெடுக்கிறார்களே என்று வியந்ததுண்டு.

9.தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இதுவரை இல்லை இனிமேலும் இருக்காது ! தாயக சினிமாக்கு ஏதாவது செய்யவேண்டும் என அவாவுடன் இருக்கிறேன்

10.தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அது பற்றி அலச எனக்கு அனுபவம் போதாதென நினைக்கிறேன்

11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
வந்தி அண்ணா சொன்ன பதில் தான் !எனக்கு ஒன்றுமே ஆகாது யாழில் சிலகாலம் எந்த தொடர்பும் இன்றி இருந்தனாங்கள் அதனால் இவை எல்லாம் எம்மைப் பாதிக்காது.

ஆனாலும் எனக்கு எப்பொதும் இணையம் வேண்டும்

இந்த சங்கிலித் தொடர் விளையாட்டுக்கு நான் அன்பாக அழைக்கும் என் இனிய நண்பர்கள்.
1. இறக்குவானை நிர்ஷன்
3. கோசலன்
4. சயந்தன் அண்ணா
5. லோஷன் அண்ணா
6. தயாளன்

இறுதியாக இன்னொன்று
தாயகத்தில் பல கலைஞர்கள் இன்னும் இலைமறை காயாக மறைந்துள்ளார்கள் இவர்களை நல்லவகையில் வெளிக்கொணர்வது நமது கடமையல்லவா
எனக்குப்பிடித்த சில நம் அருகாமை நண்பர்கள்/கலைஞர்களின் படைப்புக்கள்


அரங்கேற்றிய வகைகள் , , |

10 கைதட்டல்(கள்):

  1. கானா பிரபா Says:

    நன்றாக இருக்கு, உங்களுக்கும் பாஸ்,

    ஏன் பலிபீடத்தில் எழுதாம இங்கை

  2. மாயா Says:

    சினிமா தொடர்பானதாக இருப்பதால் இதில் எழுதிவிட்டேன்

    பின்னூட்டத்திற்க்கு நன்றி

    மாயா

  3. Nimal Says:

    நல்லா இருக்கு...

    //தாயக சினிமாக்கு ஏதாவது செய்யவேண்டும் என அவாவுடன் இருக்கிறேன்//
    முயற்சிக்க வாழ்த்துக்கள்!

  4. வந்தியத்தேவன் Says:

    நல்ல பதிவு மாயா. நம்ம தாயகக் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் குறிப்பாக வலைஞர்களை முன் கொண்டுவருவதற்க்கு நானும் நிர்ஷனும் சில ஆக்கபூர்வமான செயற்பாடுகள் செய்ய எண்ணியுள்ளோம். எப்போது அது நிறைவேறுகின்றது என்பதுதான் கேள்விக்குறி.

  5. Anonymous Says:

    நல்லாயிருக்கு :)

  6. மாயா Says:

    நிமல்,தூயா,வந்தி அண்ணா வரவுகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி

    // நம்ம தாயகக் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் குறிப்பாக வலைஞர்களை முன் கொண்டுவருவதற்க்கு நானும் நிர்ஷனும் சில ஆக்கபூர்வமான செயற்பாடுகள் செய்ய எண்ணியுள்ளோம். எப்போது அது நிறைவேறுகின்றது என்பதுதான் கேள்விக்குறி.//

    விரைவில் நிறைவேறும்

  7. ARV Loshan Says:

    அன்பின் மாயா பதிவு நல்லது.. இன்னும் கொஞ்சம் அதிகமா நீங்கள் எழுதி இருக்கலாமோ என்று தோணுது..
    நான் ஏற்கெனவே இந்தத் தொடர் விளையாட்டில் இணைந்து எழுதியாச்சு.. நீங்களும் பின்னூட்டம் போட்டதா ஞாபகம்

  8. மாயா Says:

    வணக்கம் அண்ணா கனக்க எழுதவேணும் போல தான் இருக்கு ஆனால் நேரமில்லை . .
    அண்ணா

    இலங்கையிலிருந்திருந்தால் இன்னும் வடிவா எழுதலாம் என்று தெரியுது தான் ஆனாலும் ஏதோ எழுதியதே பெரிய வேலைமாதிரி எனக்குத்தெரியுது

    மற்றும் உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
    நன்றி

  9. இறக்குவானை நிர்ஷன் Says:

    தாமதத்துக்கு மன்னியுங்கோ.

    நல்லதொரு பதிவு. என்னை அழைத்தமைக்கு நன்றி மாயா. மேடைத் தளத்தில் எழுதியிருக்கிறேன்.

    தாயகக் கலைஞர்களுக்கான உங்கள் முயற்சிக்கு வெற்றியளிக்கட்டும்.

    //யாழ்ப்பாணத்தில் இருந்த பன்னிரண்டு திரையரங்குகளில் எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கிறது //

    இப்போது எத்தனைத் திரையரங்குகள் இருக்கின்றன?இயங்குகின்றன??

  10. மாயா Says:

    இப்போது எத்தனைத் திரையரங்குகள் இருக்கின்றன?இயங்குகின்றன??

    யாழ் நகரில் தற்போது மனொகரா,ராஜா,நாதன்ஸ் என்று மூன்று திரையரங்குகள் இயங்குவதாக தெரிகிறது. (நான் அங்கிருந்து வரும்வரை) அதை தவிர நகருக்கு வெளியே சுன்னாகத்தில் நாகம்ஸ் சினிமா, நெல்லியடியில் மகாத்மா , இணுவிலில் ஒரு திரையரங்கு என ஏதோ இயங்கவேண்டுமென்பதற்காக இயங்கிக்கொண்டிருக்கின்றன. நான் அங்கிருக்கும் காலங்களில் ஓகோ .. வெனத்தான் இயங்கின பின் தற்போதைய சூழ்நிலையில் கொஞ்சம் நிலமை கவலைக்கிடம் தான் . . . என நண்பர்கள் கூறினார்கள்.